ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-03 18:45 GMT

தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், பிரவீன் குமார், பழனிவேல் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், மாவட்ட பொது செயலாளர்கள் மணிமாறன், பவர் நாகேந்திரன், பட்டியல் அணி பொறுப்பாளர்கள் கிங் பிரபு, இளங்கண்ணன், வாசு சேகர், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் முருகன், ராமச்சந்திரன், எஸ்.பி.குமரன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்