சிவகாசி தாலுகாவில் உள்ள புதுக்கோட்டை பி. பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் முத்தையா தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய நிலங்களுக்கு மத்தியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.