சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கையில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துண்டு அணிந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை மாநில துணை தலைவர் செல்வகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ரத்தினம், குணாஉள்பட பலர் கலந்து கொண்டனர்.