ஏ.ஐ.டி.யு.சி, சார்பில் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி, தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே ஏ.ஐ.டி.யு.சி, தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாகனங்களுக்கு போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் போடப்படும் ஆன்லைன் அபராதத்தை கை விட வேண்டும், தொழிலை பாதிக்கும் மோட்டார் வாகன சட்டத்தை கை விட வேண்டும், மோட்டார் தொழிலாளர் நல வாரிய பதிவுக்கான முகாம் நடத்த வேண்டும், பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.