காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-02 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி காங்கிரஸ் நகர் தலைவர் காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட சேவா தள தலைவர் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் அருள் ஜெயராஜ், நரிப்பையூர் வட்டார தலைவர் ஞானசேகரன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் முனியசாமி, வட்டார பொருளாளர் அப்துல் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சாயல்குடி நகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, நகர பொதுச்செயலாளர் அந்தோணிசாமி, மாவட்ட செயலாளர் அமிர்தராஜ், முன்னாள் நகர் தலைவர் முனியசாமி, கடலாடி மேற்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் அய்னுல் ஜாரியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்பு ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நகர தலைவர் ஜெயராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்