அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தளியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை
தளியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடை விடுமுறை விட வேண்டும். உள்ளூர் பணியிடை மாறுதல் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.