வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-11 20:55 GMT

வாழப்பாடி:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வாழப்பாடி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் கார்த்திக் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது தாசில்தார்களுக்கு துணை ஆட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி துணை தாசில்தார் பதவியிறக்கத்தை ரத்து செய்து பதவி உயர்வை வழங்க ஆணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி பெயர் மாற்ற அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்