சிவகாசி,
இந்தியாவை சிதைத்தது காரல் மார்க்சின் சித்தாந்தம் என்று கவர்னர் பேசியதை கண்டித்து சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். நகர செயலாளர் இக்பால், கலைவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுத்திரம் கண்டன உரையாற்றினார். இதில் டிமிட்ரோ, முனியசாமி, ஜெயபால், ரவி, கோவிந்தசாமி, கிருஷ்ணசாமி, பாண்டியன், ராஜாராம், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.