விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டியில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பா.ஜ.க. நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் இப்ராகிம், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மேலிட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறுகையில்,
விருதுநகரில் கிராம பகுதிகளில் ராஜீவ் காந்தி குடிநீர் திட்டம் என்ற பெயரில் கிராம மக்களிடமிருந்து பணம் வசூலிப்போர் மீதும், 100 நாள் வேலை திட்ட பயனாளிகளிடம் இருந்து 8 சதவீத கமிஷன் பெறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்குநிலை குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் முறையிட மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.