ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-18 22:53 GMT

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் கலப்பு திருமண தம்பதிகளுக்கு அரசு பணியில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணியன் பூங்குன்றன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன், தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் சங்க மாநில செயலாளர் பரமசிவம் மற்றும் வெங்கடேஷ், நேதாஜி, சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சேலம் மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய சார்பதிவு அலுவலகங்களுக்கு சென்றால் பெற்றோர் கட்டாயம் வேண்டும் என்று இத்திருமண சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்