காரைக்குடியில், ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

காரைக்குடி ஸ்டேட் வங்கி முன்பு ஏ.ஐ.டி.சி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-17 18:45 GMT

காரைக்குடி

அதானிக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் தள்ளுடி மற்றும் ரூ.68 ஆயிரம் கோடி கடன் பங்கு மார்க்கெட்டில் இழப்பு ஆனதை கண்டித்து காரைக்குடி ஸ்டேட் வங்கி முன்பு ஏ.ஐ.டி.சி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ஏ.ஜி. ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி மாநில துணைத்தலைவர் பி.எல் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், கட்டிட தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், நடைபாதை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், பொது சுகாதார தொழிலாளர் சங்க நகர செயலாளர் ராமராஜ், தலைவர் முருகன், ஆட்டோ சங்க நகர தலைவர் முத்தையா, ராமு, நகர செயலாளர் தங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்