ஆர்ப்பாட்டம்
சிவகங்கை ஒன்றிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை ஒன்றிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் உடையார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும், காலி பணியிடங்களில் 5 சதவீதத்தை பதவி உயர்வு மூலம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் விஜயா நன்றி கூறினார்.