தனியார் மயமாக்குவதை கண்டித்து உருக்காலை உரிமை போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம்
தனியார் மயமாக்குவதை கண்டித்து உருக்காலை உரிமை போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரும்பாலை:
சேலம் உருக்காலை முன்னாள் ஊழியர்கள் சங்கம் மற்றும் உருக்காலை உரிமை போராட்ட குழு சார்பில் உருக்காலை 3-வது நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தன், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், 20 ஆண்டுகள் பணிமுடித்த சங்க ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.