ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-05 18:45 GMT

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், முத்துச்சாமி, மகேஸ்வரன், ஜோசப்சேவியர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் சரண்டர் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் காலமுறை, சிறப்புமுறை ஊதியம், தினக்கூலியில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி. செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இளமாறன், மலைராஜ், சரவணன், கணேஷ், ராம்குமார், ஜேம்ஸ் குமார், முத்துராமலிங்கம், கிருஷ்ணகுமார், ஜான்பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்