பொங்கல் பரிசுடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-03 18:45 GMT

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் சரோஜன், மாதேஸ்வரன், பழனியம்மாள், சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தகுதியற்ற ஓய்வூதியர்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஆய்வை கைவிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை எந்த காரணங்களும் சொல்லாமல் மாதந்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்