பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர் பகுதியில் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-26 19:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே பேளகொண்டபள்ளி முதல் கர்நாடக எல்லை வரை புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக ஓசூர் பகுதியில், 340 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக இழப்பீடு வழங்க கோரி ஓசூரில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு பிரிவு) அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், அமைப்பு செயலாளர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழக அரசு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துமாரி மற்றும் அதிகாரிகளிடம் பா.ம.க.வினர் மற்றும் விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 பேருக்கு அவார்டு பிரதி வழங்கப்பட்டது., மற்ற விவசாயிகளுக்கு இன்னும் 2 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்