இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இயக்கத்தின் ஆதரவு அமைப்பை சார்ந்த மாரியப்ப பிள்ளை, செல்வராஜ், அருள் செல்வன், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் மாதேஷ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் அருள் சுந்தர ரூபன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.