கடையம்
கடையத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கடையம் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கார்த்தி்கேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி, இந்து மகாசபை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.