தமிழ்த்தேச குடியரசு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் தமிழ்த்தேச குடியரசு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழ்த்தேச குடியரசு இயக்கம் சார்பில் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தி.க. தலைவர் வனவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், இலங்கை அரசு வசமுள்ள படகுகளையும் மீட்க வேண்டும். எல்லைகளை அறிந்து கொள்ளும் வகையில் நவீன மிதவையை அமைக்க வேண்டும். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மீனவர் பாதுகாப்பு படையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.