அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை எதிர்த்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராசிபுரம்
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்ட துணைத்தலைவர் தீபிகா தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.