அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

Update: 2022-11-05 18:45 GMT

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. அதுபோல் மாநகராட்சிக்கு உட்பட்ட பூ மார்க்கெட் அருகில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் பொதுமக்கள் நடப்பதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே இந்த பூ மார்க்கெட் அருகே உள்ள சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். இதில் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்