ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-27 19:26 GMT

மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து விருதுநகரில் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாரத் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர் கருப்பசாமி கண்டன உரையாற்றினார். போராட்டத்தை நிறைவு செய்து இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் தோழர் அரவிந்த் பேசினார். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோபிரியா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பொன்பாண்டி, பாண்டீஸ்வரன், முத்துகணேஷ், சண்முக முனீஸ்வரன், வீர அருண்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்