கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள், மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள், மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-22 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி மாடுகளுடன், விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் தனபால் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, மாவட்ட தலைவர் அன்பு, துணை செயலாளர்கள் சின்னசாமி, ஆ.ஜீவானந்தம், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.51 என கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் கூட்டுறவு பால்வள ஒன்றியங்களுக்கு விற்பனை விலை குறைப்புக்கு தமிழ்நாடு அரசு ரூ.300 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், தர்மபுரி மாவட்டத்தில் 5 லட்சம் லிட்டர் பாலை ஆவின் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும், பால் கொள்முதல் பாக்கியை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும், பால் கொள்முதல் செய்யும் போதே பாலின் அளவு, தரம் ஆகியவற்றை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்திட வேண்டும், பள்ளிக்குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடர் சேர்த்து வழங்கிட வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பால் உற்பத்தியாளர்கள் கோஷமிட்டனர். முடிவில் சின்னசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்