அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-10-12 18:45 GMT

தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன் தலைமை தாங்கினார். மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அனைத்து துறைகளிலும் முறைகேடு ஆகியவற்றை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நகரச் செயலாளர் வில்சன் நன்றி கூறினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்