ஆர்ப்பாட்டம்

பட்டாசு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-09-29 19:18 GMT

சிவகாசி, 

விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் முன்பு பட்டாசு தொழிலாளர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவா, மகாலட்சுமி, பாண்டியன், ஜெபஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 35 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனசை 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். அரிசி, பருப்பு, கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப 40 சதவீதம் கூலி உயர்த்தி வழங்கிட வேண்டும். சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பட்டாசு ஆலைகளை மூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்