அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-27 18:45 GMT

தர்மபுரி மாவட்ட அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.சி.சி.சி. மாவட்ட தலைவர் தேவபாலன்சுரேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிறிஸ்தவ சிறுபான்மை பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் பால்பிரபாகரன், மாவட்ட செயலாளர் ஸ்டீபன், மாவட்ட பொருளாளர் பால்சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பூட்டப்பட்ட கிறிஸ்தவ சபைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சபைகள் இடிப்பதை தடுக்க வேண்டும். கிறிஸ்தவ போதகர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது. கல்லறை தோட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். அனைத்து திருச்சபைகளுக்கும் கட்டிட உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்