தொ.மு.ச.வினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் தொ.மு.ச.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-21 18:45 GMT

தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷன் யூனியன் மண்டல தொ.மு.ச. சார்பில் தர்மபுரியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மண்டல தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கலைதாசன், பொருளாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர்கள் சதாசிவம், வையாபுரி, இளங்கோ, பழனி, சரவணன், குமார், ஞானசேகரன், பற்குணன், நாகவள்ளி, எட்வின், கோவிந்தராசு, கணேசன், சுமன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு துறையினரை மண்டல மேலாளராக நியமனம் செய்ததை திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்கக்கூடாது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்படும் பண இழப்பை உரியவரிடம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். ஒப்பந்தம் மூலம் சுமை தூக்குவோரை நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்