தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், செண்பகம் சந்தோஷ், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
கோஷங்கள்
குடிநீர் கட்டணம், கழிவுநீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, மோகன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, கூட்டுறவு பணியாளர் சங்க மாநிலச்செயலாளர் சின் அருள்சாமி, கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், மதிவாணன், பழனி, செந்தில்குமார், கோபால், சேகர், செல்வராஜ், செல்வம், பசுபதி, முருகன், அருள், மகாலிங்கம், செந்தில், தனபால், தங்கராஜ், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாணிக்கம் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.