எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கருணாநிதி, கோட்ட செயலாளர் சிவமணி, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் மாதேஸ்வரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் புகழேந்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி அங்கம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
காப்பீட்டு முகவர்களின் கமிஷன் குறைப்பு தொடர்பான முன்மொழிவை கைவிட வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தவேண்டும். குழு காப்பீடு செய்வதற்கான வயது வரம்பை நீக்க வேண்டும். எல்.ஐ.சி. முகவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.