சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-07 16:31 GMT

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் இறந்தவரின் வாரிசுகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், இணை செயலாளர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர்கள் ரவிக்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மயில்சாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்