ஆர்ப்பாட்டம்

திருச்சுழி அருகே கல்லூரணியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-16 19:58 GMT

திருச்சுழி,

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சுழி அருகே கல்லூரணியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சுழி ஒன்றிய தலைவர் கந்தசாமி, அருப்புக்கோட்டை நகர செயலாளர் நாகராஜ், துணைத் தலைவர் சிவசங்கர், விருதுநகர் நகர தலைவர் காளைபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி உள்பட இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை திருச்சுழி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்