ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-10 19:07 GMT

காரியாபட்டி.

காரியாபட்டியில் உள்ள அமல அன்னை கிறிஸ்தவ ஆலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமல அன்னை ஆலய பங்குத்தந்தை பாப்புராஜ் தலைமை தாங்கினார். விருதுநகர் மறைவட்ட தலைவர் சூசைராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மறைவட்ட பொறுப்பாளர் பனைக்குடி பாக்கியராஜ், அமல அன்னை ஆலய பங்குத்தந்தை உறுப்பினர்கள் சுரபிவிக்டர், முன்னாள்ஆசிரியை தேக்ளா, மூத்த உறுப்பினர் ரத்தினம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல புத்தூர் திருஇருதய ஆலயத்தில் தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க கோரி கருப்பு கொடியேற்றி மத்திய அரசை வலியுறுத்தி கிறிஸ்தவ ஆலயத்தின் போதகர் சந்தன சகாயம் தலைமையில் ஜேம்ஸ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்