தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனைக்கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தே.மு.தி.க சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தொழிற்சங்க பேரவை துணை தலைவர் பொன் இளங்கோ தலைமை தாங்கினார்.
இதில் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் முருகேசன், பொறியாளர் அணி துணை செயலாளர் சுகுமார், திண்டுக்கல் மாநகர மாவட்ட செயலாளர் மாதவன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜவகர், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின்கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அதேபோல் அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.