ஆர்ப்பாட்டம்

நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-21 20:04 GMT

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூரைச் சேர்ந்த முருகேசன், வாகைகுளத்தை சேர்ந்த மாணிக்கராஜ் ஆகியோர் போலீஸ் விசாரணையில் இறந்து உள்ளதாகவும், அவர்கள் இறப்புக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவாக இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேதாஜி சுபாஷ் சேனை நிறுவன தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். இதில் மாநில மக்கள் தொடர்பு செயலாளர் தங்கமாரி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்