பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெண்ணாடம்,
திட்டக்குடி பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டசெயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தவறிய ஆசிரியர்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மேரிமாதவி, வட்டக்குழு உறுப்பினர்கள் வரதன், அரவிந்த், மாதர் சங்க வட்டசெயலாளர் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.