சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-05 16:47 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நலவாரிய பணிகளை சீர்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சங்க மாநில செயலாளர் நாகராசன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் ஜீவா, கலாவதி, நாகராஜன், தெய்வானை உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். நலவாரிய ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கு உரிய பண பலன்களை வழங்க வேண்டும். நல வாரிய உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரியம் மற்றும் ஓட்டுனர்களுக்கான நலவாரிய நிதியை சம்பந்தப்பட்ட வாரிய உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல வாரிய பணிகள் தொடர்பாக கலெக்டர் தலைமையிலான கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும். முறை சாரா தொழிலாளர்களை பாதுகாக்க நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்