ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்மேற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பின் சார்பில் தர்மபுரி ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குணசேகரன், ஜெபஸ்டின் ஜெயராஜ், மதிவாணன், சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவத்தில் பணியாளர்களை சேர்க்க அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ரெயில்வே ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.