கல் குவாரிகளை மூட வலியுறுத்தி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை அருகே கல் குவாரிகளை மூட வலியுறுத்தி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-29 14:20 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட கொரட்டகிரி கிராமத்தை சுற்றியுள்ள கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மதனகிரி முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குவாரிகளை மூட வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு பா.ஜனதா மற்றும் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தளி வடக்கு மண்டல தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் தாலுகா அலுவலகத்தில் குவாரிகளை மூட வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன், நகர தலைவர் வெங்கட்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் மனோகர், விஜயகுமார், மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாப்பண்ணா, மேற்கு மண்டல தலைவர் சந்துரு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்