விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்திட வேண்டும், தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி 100 நாள் வேலையை 150 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.381 ஆக உயர்த்தி வழங்கிடகோரியும் ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலையில் 6 மணிக்கு தொழிலாளர்களை வரவழைத்து புகைப்படம் எடுக்கும் போக்கை கைவிடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலைக்கு முழுமையான கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் வரதராஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் செல்வராசு, சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் வேலு, மாவட்ட துணை செயலாளர் எத்திராஜி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.