அம்பை:
அம்பாசமுத்திரத்தில் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஸ்வ இந்து பரிஷத் இணைச் செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவர் தளவாய் முன்னிலை வைத்தார். இந்து கடவுள்களை அவமதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில திருக்கோவில் திருமடங்கள் இணை அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாகிகள் மாவடி கண்ணன், ஹரி சுடலைமணி, பாபநாசம், கருப்பசாமி, பா.ஜ.க.வை சார்ந்த ராமராஜ் பாண்டியன், குட்டி, ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் தங்கேஸ்வரன், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், மாரியப்பன் உள்பட இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.