ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட குழு அமைப்பாளர் முனியசாமி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை அமைப்பாளர் ராமசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி ஊராட்சிகள் மூலம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் ஆபரேட்டர், தூய்மை காவலர்களுக்கு பணிக்கொடை ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.