ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் மத்திய அரசு அறிவித்துள்ள 'அக்னிபத்' அறிவிப்பை திரும்ப பெறக் கோரியும், அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி தாளாளர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் தமிழ் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.