ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட தலைவர் ரியாஸ் அகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் கரீம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய பா.ஜ.க. ஊடக பொறுப்பாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் உத்திர பிரதேசத்தில் இச்சம்பவம் தொடர்பாக போராடியவர்களின் வீடுகளை இடித்த உத்திரபிரதேச அரசுக்கும், துப்பாக்கி சூடு நடத்திய ஜார்கண்ட் அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் ஆசாத் நன்றி கூறினார்.