ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-13 19:43 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 27-வது வார்டு பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நகர துணைச்செயலாளர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை துணைச்செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி, நகர செயலாளர் விஜயன், நகர பொருளாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்