ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல அருப்புக்கோட்டையிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட தலைவர் மாதார்கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள், பெண்கள் என திரளான பேர் கலந்து கொண்டனர்.