ஆர்ப்பாட்டம்
தேனியில் சி.ஐ.டி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 31 சதவீதம் வழங்க வேண்டும், அரசு அறிவித்தபடி பொது வினியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொருளாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயல் தலைவர் பிச்சைமணி, மாவட்ட செயலாளர் செந்தில்காமு மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.