நாங்குநேரி சம்பவத்தை கண்டித்துஊத்தங்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஊத்தங்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் மோகன், மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை செயலாளர் அசோகன், மாநில மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முனிராவ், நிர்வாகிகள் முனுசாமி, பிரபாகரன், கோவேந்தன், துரைவளவன், மாநில நிர்வாகிகள் இளமுருகன், அம்பேத்கர், ஒன்றிய, நகர நிர்வாகிகள் சின்னத்தம்பி, செந்தில்குமார், அண்ணாமலை, சிவக்குமார், திருப்பதி, சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.