கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தோப்பையகவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர் அகமத், மாவட்ட மகளிர் அணித் தலைவி பெருமா, மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அனுமந்தராசு, மாவட்டத் தலைவர் வேலு, மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், வேளாண் விளைப்பொருட்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நெல் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கவேண்டும். வேளாண் விளைப் பொருட்கள் அனைத்தும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.