தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புபுதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-01 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் சக்திவேல், ஷாநவாஸ், சரவணன், மாது, ராஜேஸ்வரி, மாதையன் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்