மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துஊத்தங்கரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஊத்தங்கரையில் ஒன்றிய, நகர மனித நேய மக்கள் கட்சி சார்பில் நான்கு முனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் கொம்பன் ஆனந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரசூல்பாஷா வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் யாசின், மாநில இளைஞரணி முகமது ரபி, நகர தலைவர் சதாம், நகர துணை தலைவர் அன்வர் பாஷா, நகர செயலாளர் சேக் முகமது, ஒன்றிய பொறுப்பாளர் கலீல், ஒன்றிய செயலாளர் ஜான் பாஷா, நகர நிர்வாகி சாதிக் பாஷா, இலியாஸ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைமை கழக பேச்சாளர் சனாவுல்லா, மாவட்ட தலைவர் நூர்முகமத், மாவட்ட செயலாளர் வாஹித் பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை செயலாளர் அசோகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் நெப்போலியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் மகாலிங்கம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய செயலாளர் ஆதிகேசவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் நூருல் அமீன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.